இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய டெல்டா திரிபு தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மலித் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் இந்தப் பிரச்சினை, இலங்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது அடுத்த சில வாரங்களில் இலங்கை மிக மோசமான கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் என்றும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என்றும் பேராசிரியர் மலித் பீரிஸ் கூறியுள்ளார்.

Related Posts