இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

scholarship-applicationஇந்தியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக 08 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதம், யுனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி, மற்றும் யோகா ஆகிய பாடநெறிகளுக்கே புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைப்படி தெரிவுசெய்யப்படவுள்ள மாணவர்களுக்கு கல்வி, சுகாதாரம், தங்குமிட வசதிகளுக்கான உதவித்தொகை இந்திய அரசினால் வழங்கப்படும்.

இக்கற்கை நெறிகளைப் பயில விரும்பும் மாணவர்கள் தமது சுயவிபரக்கோவையினை எதிர்வரும் ஜூலை 08 ஆம் திகதிக்கு முன்னர் உயர் கல்வி அமைச்சு, 18, வாட் ப்ளேஸ், கொழும்பு – 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Related Posts