இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார்.
தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, ” என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம்” , என்று கூறியிருக்கிறார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த கருத்து பிரசுரிக்கபட்டிருக்கிறது.