இலங்கை பொலிஸ் சேவையில் பதவி வெற்றிடம் : தமிழ் மொழி பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை

இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்­டபிள் / பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் / பொலிஸ் கான்ஸ்­டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன்பிரகாரம், விண்­ணப்­பிக்கும் பத­வியை குறிப்­பிட்டு பதி­வுத்­த­பாலில் 2017.06.02 ஆம் திக­திக்கு அல்­லது அதற்கு முன்­ப­தாக விண்­ணப்­பப்­ப­டி­வங்­கள் கிடைக்கக்கூடியதாக அனுப்­பப்­படல் வேண்டும்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தமிழ் மொழி பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 2017.03.31 ஆம் திகதியன்று வெளியாகி அரச வர்த்தமானி இலக்கம் 2013 ஐ பார்கவும்.

Related Posts