யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை எல்லாவகையிலும் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என கொரிய குடியரசின் விசேட பிரதிநிதிகளும் முன்னாள் வெளிவிவகார அமைசர் யு மியுங்க் – ஹ்வான் ((Yu Myung-hwan)) அவர்களும் நேற்று (21) மாலை அலரி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபோது குறிப்பிட்டார்
முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகளை சமூகமயப்படுத்தியமை மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மிகத் துரிதமாக மீளக் குடியேற்றியமை என்பவற்றை யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தில் நாடு அடைந்துள்ளமுன்னேற்றத்திற்கு இரண்டு உதாரணங்களாக மியுங் ஹ்வான் எடுத்துக் காட்டியுள்ளார். முதலாவது வட மாகாண சபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியமை பற்றியும், காணாமற் போனவர்கள் தொடர்பாக சனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும் அரசாங்கத்துக்குப் பாராட்டு உரித்தாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எதிர்கால நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்காக தாம் ஆணைக்குழு அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக சனாதிபதி குறிப்பிட்டார். வட மாகாணத்திற்கு விஜயம் செய்யும்படி சனாதிபதி அவர்கள் கொரிய விசேட பிரதிநிதிகளை ஊக்குவித்தார்.
அபிவிருத்தியின்போது நாம் தெற்கைவிட அதிக முன்னுரிமை வடக்கிற்கு அளித்துள்ளோம். நீங்கள் அப்பிரதேசத்திற்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தியைப் பார்க்க வேண்டியது முக்கியம் என சனாதிபதி கூறினார்.
இலங்கையுடன் ஒத்துழைப்பையும் வலுவான இருதரப்பு உறவுகளையும் பேணுவதற்கு தமது அரசு அர்ப்பணிப்புடன செயலாற்றுவதை மியுங்க் – ஹ்வான் மீண்டும் வலியுறுத்தினார். அபிவிருத்திக்காக உங்கள் அரசுக்கு ஆகக்கூடிய உதவியை செய்ய நாம் தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்னவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.