இலங்கை படுதோல்வி : தொடரையும் இழந்தது

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

507 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையூம் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ரபாடா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 2-0 என கைப்பற்றியுள்ளது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக கே ரபாடா (தென் ஆப்ரிக்கா) தெரிவுசெய்யப்பட்டார்

Related Posts