இலங்கை, பங்களாதேஷ் முதல் டெஸ்ட் : துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்லஅசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, சுராங்க லக்மால், லஹிரு குமார மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிஹுர் ரஹீம், தமிம் இக்பால், சோமிய சர்க்கார், மொனிமுல் ஹக், மஹமதுல்லா, சகிப் அல் ஹசன், லிடோன் டையாஷ், மெஹிதி அசன் மிராஷ், தஷ்கின் அஹமட், முஷ்தபிஹுர் ரஹ்மான்,சுபாஷிஷ் ரோய் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

Related Posts