இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவிகள்

பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர்.

அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்தவருட இறுதிப்பகுதியில் நடைபெற்ற தேசியரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், பெரியளவிலான வசதிகள் எவையும் இன்றியே இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் குறித்த அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சியில் இவர்களுக்கான ஒரு பிரத்தியேக உள்ளரங்கம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts