இலங்கை துறைமுக வரலாற்றில் முதல் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கொழும்பு துறைமுக அதிகார சபையின் மஹாபொல பயிற்சி நிறுவகத்தின் கப்பல் போக்குவரத்துத் துறை சார்ந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட , துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கென்ரி பழுதூக்கும் இயந்திரங்களை இயக்குவது பற்றி துறைமுக அதிகார சபையின் மஹாபொல பயிற்சி நிறுவகத்தில் மகளிர் குழுவொன்றுபயிற்சி பெற்று வருவதாகவும், அடுத்த மாதம் 8ம் திகதி பயிற்சியை பூர்த்தி செய்து இந்தப் பெண்கள் வெளியேறுவதாகவும் , துறைமுக அதிகார சபையில் அவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.