இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர், மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விருப்பமற்றுள்ளனர் தெரிவித்துள்ளனர் என அவர்கள் தொடர்பில் மெற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்ததாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பாயில் உள்ள டாட்டா சமூக விஞ்ஞான ஆய்வகத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 520 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 23 சதவீதத்தினர் இலங்கை திரும்ப விரும்புவதாகவும் அவர்களில் 4 சதவீதமானோர் இலங்கை செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை திரும்ப விரும்புபவர்களில் 48.2 சதவீதமானோர் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலேயே வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.