இலங்கை தமிழ் அகதி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நபர் ஒருவர், கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவமொன்று சனிக்கிழமை(26) தமிழகத்தின் சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இடம்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் சசிகுமார் (வயது 31) என்பவரே இவ்வாறு கழுத்தை அறுத்துக்கொண்டார்.

இதில் படுகாயங்களுக்குள்ளான நபர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருவதாகவும் விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் கோவையில் இருந்து, சேலம் பஸ்சில் வந்த், புது பஸ் ஸ்டாண்டில், போத்தல் ஒன்றை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி பொலிஸார், குறித்த நபரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Posts