இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணம் திமுக

இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணம் திமுக என, தமிழக முதல்வர் ஜெயலலிதாக தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அதிமுக, வேட்பாளர்களை ஆதரித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தமிழர்களின் இனப் படுகொலைக்குக் காரணம் தி.மு.க, அந்த இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தத் தூண்டியது அ.தி.மு.க.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட உடந்தையாய் இருந்தது தி.மு.க, கச்சத்தீவை மீட்க பாடுபடுவது அ.தி.மு.க. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது வேடிக்கைப் பார்த்து, அவர்கள் “பேராசைக்காரர்கள்” என பழித்தது தி.மு.க, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட பாடுபடுவது அ.தி.மு.க. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts