இலங்கை தமிழர்கள் இருவர் கைது

இந்தியாவின் பவானிசாகர் அருகே, தகராறில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பவானிசாகர் பூங்கா அருகே, மதுக்கடை ஒன்று உள்ளது.

பவானிசாகர் அடுத்த காராச்சிக்கொரை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சந்திரமோகன் என்பவர், அந்த மதுக்கடை அருகேயுள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார்.

அப்போது, அங்கு குடி போதையில் இருந்த இரு இளைஞர்கள் சந்திரமோகனிடம், தகாத வார்த்தை பேசி, தகராறில் ஈடுபட்டனர்.

அருகில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டும், தகராறு நீடித்தது என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, பவானிசாகர் பொலிசார், மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், தகராறில் ஈடுபட்ட இருவரும், இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த, முரளிதரன், ரேகன் என்பது தெரிந்தது.

புகாரின்படி, இருவரையும் பொலிசார் கைதுசெய்தனர்.

Related Posts