ஆபத்தான தொழிற்துறைகளில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஊழியர் ஒருவர் மரணமடையும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும் ஊழியர்கள் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய துரிதமான நடவடிக்கைகளை கண்டறிவதற்காக, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.