இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மையை எரித்த 13 பேர் கைது

தமிழகத்தின் தஞ்சாவூர் ரயிலடியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்ததாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை பொலிஸர் நேற்று கைது செய்துள்ளனர்.

india

இதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம். எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படுவர் எனக் கூறிய இலங்கை ஜனாதிபதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மைக்குத் தீ வைத்தனர் என தமிழக ஊடகமாம் கூறியுள்ளது.

இதைப் பார்த்த பொலிஸார் தீயை அணைத்தனர். இதுதொடர்பாக 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்த ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Posts