சுழற்பந்து வீச்சாளர் கவ்ஷல் பந்து வீச்சில் சந்தேகம்

இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Kavsal

இந்த நிலையில் இந்த போட்டி தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய 22 வயதான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவ்ஷல் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த 14 நாட்களுக்குள் தாரிந்து கவ்ஷல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த பரிசோதனையின் முடிவை பொறுத்தே அவரது பந்து வீச்சு தலைவிதி முடிவாகும்

Related Posts