இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

thilanka-sumathy-pala

இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை எடுத்துள்ளார். இதன்படி 32 வாக்குகள் வித்தியாசத்தில் திலங்க சுமதிபால வெற்றியீட்டியுள்ளார்.

திலங்க சுமதிபால இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் கே.மதிவாணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில், உப தலைவர் பதவிக்காக போட்டியிட்ட, ஜெயந்த தர்மதாச 102 வாக்குகளையும், மதிவாணன் 100 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவருமான அர்ஜூன ரணதுங்கவும் குறித்த பதவிக்கு போட்டியிட்டார்.

அவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் 80 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக மொஹான் டி சில்வாவும், ரவீன் விக்ரமரத்ன உதவிச் செயலாளராகவும் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் ஈ.நரன்கொடவை வீழ்த்தி ஷாமினி சில்வா வெற்றியீட்டியுள்ளார்.

இதில் நரன்கொட 28 வாக்குகளையும் ஷாமினி சில்வா 115 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும் உதவிப் பொருளாளராக லலித் ரம்புக்வெல்ல தெரிவாகியுள்ளார்.

Related Posts