இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழு விபரம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு தலைவராக சிதத் வெத்தமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செயலாளராக பிரகாஷ் ஷாப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிகாலம் நிறைவுபெறுவதால் குறித்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்தக் குழுவில் நுஸ்கி மொஹமட், பிரசன்ன ஜயவர்தன, ஜயானந்த வர்ணவீர மற்றும் டி.ஹுலன்கமுவ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts