இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பதவி விலகியது

சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் ஒப்படைத்துள்ளனர்.

அண்மைக் காலமாக, இலங்கை கிரிக்கெட் அணியினர் சந்தித்து வருகின்ற தொடர்ச்சியான தோல்வியின் காரணமாக, அதிகாரிகள், விளையாட்டு இரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்களால் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முடிவினை, ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு எடுத்துள்ளது.

சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவில்,

1. சனத் ஜயசூரிய – தலைவர்
2. ரொமேஷ் களுவிதாரண – உறுப்பினர்
3. ரஞ்சித் மதுரசிங்க – உறுப்பினர்
4. எரிக் உபசாந்த – உறுப்பினர்
5. அசங்க குருசிங்க – உறுப்பினர்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு, கடந்த 2016 மே மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருடத்திற்கு அமுலில் இருக்கும் வகையில் நியமிக்கப்பட்டிருந்ததோடு, அது மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 31, 2017 வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts