இலங்கை கிரிக்கெட் சபைக்கான நிதியை நிறுத்தியது ஐ.சி.சி.!

இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைந்தது. இந்நிலையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்ட்டது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிடம் விளக்கம் கேட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை சரியான பதில் கிடைக்கும் வரை நிதி உதவியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

Related Posts