இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் புனித பற்றிக்ஸ் கல்­லூரிக்கு விஜயம்

யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் லயன் மொஹான் டி சில்வா மற்றும் மாவட்ட, மாகா­ணங்­களின் இணைப்பாளர் சித்தார்த் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

st-patricks-college-turf

யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக புற் தரையிலான கிரிக்கெட் ஆடுகளத்தை யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிறுவியுள்ளது.

குறித்த கிரிக்கெட் ஆடுகளத்தை எதிர்வரும் 29ஆம் திகதி ஊத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதுடன் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் உப அதிபர் மற்றும் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுனர் நிசாந்தன், யாழ்.மாவட்ட இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுனர் லக்சிகா, யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சந்திரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts