இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லவுள்ளதாக அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அஞ்சலோ மத்தியூஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒருநாள் மற்றும் ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிடுகையில்,

குறுங்கால திட்டத்தில் இருந்து எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது தமது நோக்கமாகும்.

அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹ தெரிவிக்கையில்,

பங்களாதேஷில் நடைபெறும் மும்முனை போட்டி சவால்மிக்க போட்டியாகும் என்றார்.

Related Posts