இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் பதவி விலகினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவின் கிரஹாம் போர்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

2019 உலக கிண்ண போட்டிகள் வரை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட போர்ட்,இப்போது இலங்கையின்

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அணி முகாமையாளர் அசங்க குருசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே போர்டின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று அறியக் கிடைக்கிறது.

ஜிம்பாப்வே அணியுடனான தொடருக்குரிய ஆயத்தங்களில் ஈடுபடும் இலங்கை அணிக்கு பயிற்சியாளர் இல்லாத நிலையில் களத்தடுப்பு பயிற்சியாளராக செயல்படும் நிக் போதாஸ் , அணியை கவனித்துக் கொள்வதாகவும் அறியப்படுகின்றது.

Related Posts