இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை உபுல் தரங்கவுக்கு

தென்னாபிரிக்க சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை, போட்டியின் இடையில் உபுல் தரங்கவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் உபாதைக்குட்பட்டதனால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஒரு நாள் போட்டிகளுக்கு சந்துன் வீரக்கொடி, லஹிரு மடுசங்க மற்றும் சத்துர சில்வா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அஞ்சலோ மெதிவ்ஸ், நுவன் பிரதீப் மற்றும் டனுஸ்க குணதிலக்க ஆகியோருக்குப் பதிலாகவே மேற்படி மூவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts