இலங்கை கிரிக்கெட் அணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டு

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

cricket

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சந்திப்பு அலரிமாளிகைளில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 17 வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 03 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தனர். இதனை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், இலங்கை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணி வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts