இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

maithiripala srisena-my3

அவர், தனது வாழ்த்துக்களை ஸ்கைப் ஊடாக தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும், நியூசிலாந்தில் ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை மட்டுமே தோல்வியையே சந்திக்காமல் காலிறுதிக்கு வந்துள்ளன.

காலிறுதிப் போட்டிகளில் மோதவுள்ள அணிகள், போட்டி நடைபெறும் தினம் குறித்த விவரம்

(நேரங்கள் இலங்கை நேரப்படி):

மார்ச் 18 – காலை 9 மணி – தென் ஆப்பிரிக்கா – இலங்கை.
மார்ச் 19 – காலை 9 மணி – இந்தியா – வங்கதேசம்
மார்ச் 20 – காலை 9 மணி – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான்
மார்ச் 21 – காலை 6.30 மணி – நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள்

அரை இறுதிப் போட்டிகள்:

முதல் அரை இறுதிப் போட்டி – மார்ச் 24 – ஆக்லாந்து

2வது அரை இறுதிப் போட்டி – மார்ச் 29 – மெல்போர்ன்

Related Posts