இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஒப்புதலையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய தெரிவுக் குழுவின் தலைவராக கிறேம் லெப்ரோய் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் காமினி விக்ரமசிங்க, ஜெரில் வோட்டர்ஸ், சஜித் ஃபெர்னாண்டோ மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், எதிர்வரும் வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடனான தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி வீரர்களைத் தெரிவுசெய்யவுள்ளனர்.

அந்தக் குழுவினர், இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று இ-20 போட்டிகள் அடங்கிய தொடரில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts