இலங்கை கிரிக்கட் நிறுவனமும் நிவாரணப் பணிகளில்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதற்காக உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று முதல் கொழும்பு 07ல் உள்ள கிரிக்கட் நிறுவன காரியாலயத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 011 2 68 16 01 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.

Related Posts