Ad Widget

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதவிகளில் மாற்றங்கள்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஆசேகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் இந்த நியமனம் அமுலாகும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தேசிய கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts