இலங்கை கிரிக்கட் அணியினரை சந்தித்தார் பொன்சேகா

இலங்கை கிரிக்கட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு சென்ற பீல்ட் மஷல் சரத் பொன்சேகா, யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விளக்கியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு வௌிப்படுத்தப்படவில்லை என்பதுடன் இலங்கை கிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts