இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் 7 படகுகள் சேதம்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஏழு படகுகள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரத்து 148 மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் மீனவர்களின் வலைகளை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அச்சுறுத்தி மீனவர்களை விரட்டியதாக தமிழக மீன்பிடித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 15 மீனவ சமுதாயப் பிரதிநிதிகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts