இலங்கை ஊடாக ஐஎஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்த்த முகவர் கைது!

கேரளாவிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இலங்கையினூடாக இளைஞர், யுவதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான விசாரணைகளை பொறுப்பெடுத்துள்ள மும்பைக் காவல்துறையினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து 21 பேர் இலங்கையின் ஊடாக சிரியாவின் தீவிரவாதிகளுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அவர்கள் 10பேரை தீவிரவாதிகளுடன் இணைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபர் கேரளாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts