இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் யாழ்ப்பாணம் விஜயம்!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தக்குழுவில் செயலாளர் பாலேந்திரா உப தலைவர்களான பிரிகேடியர் ஹாரியவசம் நளின் றொபேட் பீரிஸ் மற்றும் உதைப்பந்தாட்டப் மத்தியஸ்தர் சங்க இணைப்பாளர் யாப்பா மற்றும் ரமேஷ் முகமட் ஆகியவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள உதைப்பந்தாட்ட பயிற்சி நிலையத்தினை பார்வையிட்டதுடன் அதனுடைய அபிவிருத்தி பணிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளார்கள். இவர்களை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான அன்ரனிப்பிள்ளை, வலிகாமம் உதைபந்தாட்ட லீக் தலைவர் நா.நவரத்தினராசா ஆகியவர்கள் வரவேற்றார்கள்.

இந்தக்குழுவினர் பருத்தித்துறை மற்றும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்குகளின் பிரதிநிதிகளையும் சந்தித்த அந்தப் பகுதிகளில் உதைபந்தாட்ட அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்கள் என்பது விசேட அம்சமாகும்.

Related Posts