இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது கட்டார்!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts