“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
“பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில் பயன்படுத்தினால், இலங்கை இளைஞர்களால் உலகத்தையே வெற்றிக்கொள்ளும் திறமை இருக்கின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், அண்மையில் இடம்பெற்ற வைவமொன்றில் மேற்கண்டவாறு கருத்துரைத்த அவர், அதிநவீன தொழில்நுட்பமான ‘சபி’ தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் இலங்கைக்கு அறிமுகம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதனூடாக இலங்கை இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்த புதிய தொழில்நுட்பத்தினால், இந்நாட்டில் உள்ள வீட்டின் கதவை வெளிநாடுகளிலிருந்து கொண்டே திறக்கமுடியும். எரிவாயு மற்றும் தண்ணீர் ஆகியன வீணாகாத வகையில் நிர்வகித்துக்கொள்ளக்கூடிய திறன், இதில் உள்ளது என்றும் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.