இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறது இந்தியா

இலங்கை இராணுவத்துக்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

gothabaya jetly -koththa

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கையுடனும் மாலைதீவுடனும் பாதுகாப்பு உறவுகளை இந்தியா மேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் இரு நாட்டு இராணுவங்களுக்கும் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி அவற்றின் திறனை மேலும் அதிகரிப்பதற்க்கு உதவப்போவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் கடந்த திங்கட்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி இருதரப்பு பதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவர்த்தைகளை மேற்கொண்ட அதேவேளை செவ்வாய்கிழமை மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் நிசாமுடனும் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தியா இலங்கைக்கு இரண்டு கடலோர கண்காணிப்பு படகுகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கவுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா 24 எல்-70 துப்பாக்கிகள், ராடர்கள், நிலக்கண்ணி வெடியிலிருந்து பாதுகாப்பளிக்ககூடிய வாகனங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளதுடன் 800 முதல் 900 இலங்கை படையினருக்கு பயிற்சியையும் வழங்கி வருகின்றது.

இதேபோன்று மாலைதீவுக்குக் ஹெலிகொப்டர்களையும் ஏனைய தளபாடங்களையும் வழங்கிவருகின்றது. சமீப காலங்களில் சீனாவுடன் இந்த இரு நாடுகளும் தமது உறவை பலப்படுத்தியுள்ளதும் அதன் புதிய கடலோர பட்டுப்பாதை திட்டத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது என இந்திய நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts