இலங்கை இராணுவத்தினரால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை! ஆதங்கத்தில் ஞானசார தேரர்

இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தின் காணிகளை, சிறுபான்மை மக்கள் சுவீகரித்து வருவதாக அவர் இதன்போது குற்றச்சாட்டினார்.

இந்த காணி சுவீகரிப்பின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு காணப்படுவதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி நாட்டை காட்டிக் கொடுப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் மங்கள சமரவீரவின் வெளிவிவகார அமைச்சு பறிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts