இலங்கை, இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிகை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts