இலங்கை இந்தியா உட்பட பல நாடுகளை கைப்பற்ற போவதாக “ஐ.எஸ்.ஐ.ஸ்” முஸ்லீம் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ஐ.எஸ்.ஐ.ஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Irac

இதில் ஈராக் முழுவதையும், தாங்கள் கைப்பற்றியதன் பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன், ஐந்தாண்டு திட்டம் தயாராகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Irac2

இவ் வரைபடத்தில், ஈராக் மட்டுமன்றி, ஆபிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், மியான்மர், மற்றும் ஒஸ்ரேலிய நாடுகளும் கறுப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளதுடன் இக் கறுப்பு நிறப் பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக ISIS முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினால் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தானின் உதவியுடன் சில முஸ்லீம்கள் ஆயுதப்பயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை முழுவதையும் தாம் கைப்பற்றப் போவதாக இந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு அறிவித்திருக்கிறது.

Related Posts