இலங்கை, இங்கிலாந்து போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இன்று Bristolலில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை சார்பில் சந்திமால் 62 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி, 248 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமடைந்தது.

பின்னர் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து 4 ஓவர்களுக்கு முகம்கொடுத்து ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களைப் பெற்ற போது, மீண்டும் ஏற்பட்ட மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts