இலங்கை அபார வெற்றி

சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

255714-3

இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.

இதன்படி 36.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சிம்பாபே, 160 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை சார்பில் ஜெப்ரி வெண்டசே மற்றும் எசெல குணரத்ன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

இதற்கமைய இலங்கைக்கு 161 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில், ஆரம்ப வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்காத போதும், குஷல் மென்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தலா 57 ஓட்டங்களை விளாசினர்.

இதன்படி 37.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 166 ஓட்டங்களைப் பெற்று, ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராகவும் ஆட்டத்தின் தொடர் நாயகனாகவும் இலங்கை அணியின் BKG மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Related Posts