இலங்கை அணி வெற்றி பெற்றால் 130 மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அணிவீரர்களை உற்சாகமூட்டும் வகையில் 130 மில்லியன் ரூபாய்களை வழங்க உள்ளதாகவும், குறித்த பணத்தை திறைசேரியில் இருந்து பெறாமல் தனியார் துறைகளின் ஊடாக பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

srilankan-cricket-team

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2015 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி ஒளிபரப்பினை தேசிய ரூபவாஹினி ஊடாக ஒளிபரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த தொடரில் இருந்து கிரிக்கட் போட்டிகளை ஒளிபரப்பாக்கும் உரிமையை பெறும் அலைவரிசையை திறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

கால்டன் விளையாட்டு அலைவரிசையின் மூலம் அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்த முடியாது என அறிவித்துள்ளதை அடுத்தே குறித்த தொடரின் நேரடி ஒளிபரப்பை தேசிய ரூபவாஹினிக்கு வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கையணி வீரர்கள் விபரம்!

அஞ்சலோ மத்யூஸ் (அணித்தலைவர்) – அனைத்தாட்டம்
லகிரு திரிமன்னே (உப தலைவர்) – துடுப்பாட்டம்
மஹேல ஜயவர்த்தன – துடுப்பாட்டம்
குமார் சங்கக்காரா – விக்கெட் காப்பாளர்
திலகரட்ண டில்ஷான் – அனைத்தாட்டம்
திஸார பெரேரா – அனைத்தாட்டம்
நுவான் குலசேகர – பந்து வீச்சு
லசித் மலிங்க – பந்து வீச்சு
தம்மிக பிரசாத் – பந்து வீச்சு
ரங்கண ஹேரத் – பந்து வீச்சு
சசித்ர சேனநாயக்க -அனைத்தாட்டம்
ஜீவன் மென்டிஸ் – அனைத்தாட்டம்
டினேஸ் சந்திமால் – விக்கெட் காப்பாளர்
சுரங்க லக்மால் – பந்து வீச்சு
டிமுத் கருணாரத்ன – துடுப்பாட்டம்.

Related Posts