இலங்கை அணி வீரர் ஹசரங்க தனது கன்னிப் போட்டியில் உலக சாதனை

தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேற்றயதினம்(02) கலந்துகொண்ட வனிந்து ஹசரங்க உலக சாதனை படைத்துள்ளார்.

சிம்பாபே அணிக்கு எதிராக இன்று காலியில் நடைபெற்ற போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை தொடராக பெற்று ஹெட்ரிக் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார்.

தனது கன்னிப் போட்டியில் இவ்வாறு சாதனை நிலைநாட்டிய உலகில் மூன்றாவது வீரராக ஹசரங்க பதிவாகியுள்ளார்.

காலி ரிட்ச்மன் வித்தியாலயத்தில் கல்வி கற்ற 19 வயதான ஹசரங்க, மூன்றாம் வரிசை விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts