இலங்கை அணி வீரர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி! வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை மறித்து எதிர்பு தெரிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை படு தோல்வியைத் தழுவியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அணியின் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எதிராக ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை மறித்து, கூக்குரல் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

பொதுவாக இலங்கை அணியின் ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts