இலங்கை அணி வீரர்கள் ஐவருக்கு உபாதை

இந்தியாவுடனான 20க்கு 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அந்த அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார்.

இந்நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் உபதைக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அணியில் தெரிவாகியுள்ள வீரர்கள் வருமாறு,

தினேஷ் சந்திமால், தில்ஷான், சீகுகே பிரசன்ன, மிலிந்த சிறிவர்தன, தனுஷ்க குணதிலக, திஸர பெரேரா, தசுன் சானக, அஸேல குணரட்ன, சாமர கப்புகெதர, சமீர துஷ்மந்த, தில்ஹார பெர்ணான்டோ, கசுன் ரஜித, பினுர பெர்ணான்டோ, சசித்ர சேனாநாயக்க, ஜெப்ரி வெண்டர்சே

Related Posts