இலங்கை அணி வீரர்களுக்கு வசீம் அக்ரம் பயிற்சி!

இலங்கை அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் விஷேட ஒருநாள் பயிற்சி ஒன்றை வழங்க உள்ளார்.

குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் இலங்கை வருகின்றார்.

இலங்கை அணியின் வீரர்களுக்கு, முன்னணி வீரர்களிடமிருந்து ஆலோசனைகளையும், அவர்களது அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்பா்த்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இரவு கொழும்பில் இடம்பெற உள்ள இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்விலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் கலந்து கொள்ளவுள்ளார்.

Related Posts