இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத்

இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

jeyasooreya-atherana

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது.

இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும்.

இலங்கை அணி இந்தியாவில் அதிசயங்கள் நிழத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை. சிறந்த மற்றும் ஒரு சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கண்டிப்பாக எதிர்ப்பார்த்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

சிறந்த 4 துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராவது 40 ஓவர் வரை நிலைத்து நிற்க வேண்டும். அதையும் இலங்கை அணி செய்ய தவறிவிட்டது. பந்து வீச்சில் ஒரு சிறந்த நிலை கிடையாது. பலர் காயத்தால் அவதிப்படும் நிலையில் பந்து வீச்சும் மோசமாகவே இருந்தது.

ரசிகர்கள் இலங்கை அணியை விமர்சனப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதேசமயம் இந்த படுதோல்வி இலங்கை அணிக்கு நல்ல அனுபவமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts