இலங்கை அணி போராட்டம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

351 ஓட்டங்களுடன் நேற்றய நாளின் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டி கொக் அரைச்சதத்தை பூர்த்திசெய்து 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

488 ஒட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி நேற்றய நாள் ஆட்ட நேர முடிவின் போது 240 ஒட்டங்களுக்கு 5 இலக்குகளை இழந்து தடுமாறுகின்றது.

களத்தில் மேத்யூஸ் 58 ஒட்டங்களுடனும் டி.சில்வா 9 ஒட்டங்களுடனும் உள்ளனர். இன்றை தினம் ஆட்டத்தின் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts