இலங்கை அணி அபார வெற்றி!

பல்லேகலயில் இடம்பெற்றுவந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக் கொண்டது இலங்கை அணி.

Lakshan Sandakan,Mitchell Starc

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களைப் பெற்றதுடன், பின்னர், குஷால் மென்டிஸின் 176 ஓட்டங்கள் துணையோடு, தமது இரண்டாவது இனிங்ஸில் 353 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றியிலக்காக வழங்கியது.

இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, இலங்கையணி சார்பாக பந்துவீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக குஷால் மென்டிஸ் தெரிவானார்.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியே, ஸ்டீவன் ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts