இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் தமது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக BKG மெண்டிஸ் (இலங்கை) தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Related Posts